டயானா பேட்டி விவகாரம் தேசிய கேலரி பொறுப்பிலிருந்து முன்னாள் பிபிசி இயக்குநர் விலகல்

 

இளவரசி டயானாவை பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர் பஷீர் என்பவர் கடந்த 1996ஆம் ஆண்டில் மிரட்டியதாகவும், டயானாவின் அகால மரணத்துக்கும் பிபிசிக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவரது சகோதரர் ஏர்ல் ஸ்பென்ஷர் குற்றம்சாட்டி இருப்பது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டயானா மரணமடைந்த காலகட்டத்தில் பிபிசி இயக்குநர் ஜெனரலாக இருந்த லார்டு ஹால், இதுகுறித்து துறைரீதியான விசாரணை நடத்தி வந்தார். பின்னர், அங்கிருந்து ஓய்வுபெற்ற அவர், கடந்த 2019இல் தேசிய கேலரியின் (கலைக்காட்சிக் கூடம்) அறங்காவலராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, அதன் வாரிய தலைவராக 2020இல் பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில், டயானா பேட்டி விவகாரத்தில், அவரது பெயரும் அடிபடுவதால் தேசிய கேலரியில் தான் வகிக்கும் பொறுப்பை அவர் சனிக்கிழமை ராஜினாமா செய்தார். அந்தக் கடிதத்தில், 25 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற சம்பவத்துக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பொறுப்பை ஏற்றுக் கொள்வதுதான் தலைமைப் பண்புக்கு அழகு. மேற்கொண்டு நான் பொறுப்பில் நீடித்தால், அது விசாரணையின் நோக்கத்தை சிதைத்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Add your comment

Your email address will not be published.

6 + 11 =