தஞ்சாவூர் ஸ்ரீ கொங்கனேஸ்வரர் ஆலயத்தில் தேவார திருமுறை நிகழ்ச்சி
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் ஸ்ரீ கொங்கனேஸ்வரர் ஆலயத்தில் தேவார திருமுறை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானம் ஆகியவை இணைந்து தஞ்சாவூர் மேலவீதி அருள்மிகு ஸ்ரீ கொங்கணேஸ்வரர் ஆலயத்தில் தேவார திருமுறை நிகழ்ச்சியினை ஓதுவார்கள் நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு தலைமையேற்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து ஓதுவார்கள் சிவ வாத்தியங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு மேலவீதி ஸ்ரீ கொங்கணேஸ்வரர் ஆலயம் வந்தடைந்து.
பின்னர் கரந்தை தமிழ் சங்க மாணவர்களின் சிவ தாண்டவ நிகழ்ச்சியும் இதனைத் தொடர்ந்து சுமார் 20க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் மற்றும் பக்க வாத்திய கலைஞர்களுடன் தேவார திருமுறை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில் தென்னக பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அரண்மனை தேவஸ்தான அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.