லிவர்பூலில் படகிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

லிவர்பூல் விர்ரல் கால்டி அருகே டீ எஷ்ச்சுவரி கடற்பகுதியில் சிறிய படகு ஒன்றில் இருவர் கடந்த சனிக்கிழமை கடலுக்குள் சென்றனர். அப்போது, பலத்த காற்று வீசியதால், படகு தள்ளாடியது. இதில், இருவரும் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தனர். ஒருவர் நீந்தி கரை சேர்ந்தார். தகவலறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக ஏர் ஆம்புலன்சில் அங்கு சென்று, கடலில் தத்தளித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர்களது படகு மீட்கப்பட்டது.

Add your comment

Your email address will not be published.

19 − 18 =