இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைகிறது

இந்தியாவில் கடந்த மே 10ஆம் தேதி 24.83 சதவீதமாக இருந்த கரோனா பாதிப்பு மே 22ஆம் தேதி 12.45 சதவீதமாக குறைந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து நீதி ஆயோக் தலைவர் வி.கே. பால் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் கரோனாவின் மொத்த பாதிப்பு குறைந்து வந்தாலும், 382 மாவட்டங்களில் பாசிடிவ் சதவீதம் இன்னமும் 10 சதவீதத்துக்கு மேல் நீடிப்பதாக தெரிவித்தார்.

மேலும், 8 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இன்னும் சிகிச்சையில் இருப்பதாகவும், ஒட்டுமொத்த பாதிப்பில் 15 சதவீதத்துக்கும் மேல் 18 மாநிலங்களில் பதிவாகி இருப்பதாகவும் சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லவ் அகர்வால் குறிப்பிட்டார்.

இந்தியாவில் சனிக்கிழமை காலை 8 மணிவரையிலான நிலவரப்படி, 2 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 62 லட்சமாக உயர்ந்தது.

Add your comment

Your email address will not be published.

eighteen − 13 =