பிரேசிலில் 5 லட்சத்தை கடந்தது கோவிட் பலி எண்ணிக்கை

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில் கோவிட் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துவிட்டது. பிரேசிலில் தடுப்பூசி திட்டம் மந்தகதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாலும், பனிக்காலம் ஆரம்பித்துவிட்டதாலும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சமூக இடைவெளி உள்ளிட்ட கோவிட் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு ஆதரவு அளிக்க பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ மறுப்பு தெரிவிப்பதால், வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரேசிலின் நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதாக கூறிய “ஃ”பியோக்ரூஷ் எனும் சுகாதார நிறுவனம், வெறும் 15 சதவீத பெரியவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டது.

Add your comment

Your email address will not be published.

three − one =