அமெரிக்க அதிபரின் செல்ல பிராணி சாவு

அமெரிக்க அதிபர் ஜோபிடன் வீட்டில் கடந்த 13 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த ஜெர்மன் ஷெப்பர்டு கேம்ப் நாய் மரணம் அடைந்துவிட்டது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் தகவல் தெரிவித்த ஜோபிடன், எங்களது உற்ற தோழனை எங்கள் குடும்பம் இன்றைக்கு இழந்துவிட்டது. நான் அவனை இழந்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில், சேம்ப் உள்பட இரண்டு ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஜோபிடன் துணை அதிபராக இருந்த போதும், வாஷிங்டனில் அவரது இல்லத்தில் சேம்ப் வசித்து வந்தது.

Add your comment

Your email address will not be published.

17 + 10 =