கனடாவில் வெயிலுக்கு 130 பேர் பலி

 

கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் லைட்டன் நகரில் தொடர்ந்து 3ஆவது நாளாக கடந்த செவ்வாய்க்கிழமையும் 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மேலும், வான்கூவர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இப்போதுவரை வெயிலுக்கு 130 பேர் வரை பலியாகி இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்றும், ஒருசிலர் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

கனடா மட்டுமன்றி அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உணரப்படுகிறது. அங்கும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

Add your comment

Your email address will not be published.

five + 13 =