தந்தை கண் எதிரே மகள் சடலமாக மீட்பு

 

அமெரிக்காவின் மியாமி நகரில் 12 மாடி கட்டிடம் கடந்த வாரம் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. மீட்பு பணியில் 10 நாள்களாக தொய்வின்றி தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர் ஒருவரின் 7 வயது மகள் ஸ்டெல்லா கேட்டரோஸி, இடிபாடுகளில் இருந்து பிணமாக மீட்கப்பட்டது அவரது தந்தையை நிலைகுலைய செய்தது. இருந்தாலும், அவர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டார். அந்த தீயணைப்பு வீரரின் உறவினர் வீடு, இடிந்துவிழுந்த அபார்ட்மென்டில் இருந்ததும், அங்கு விருந்துக்கு வந்த இடத்தில் சிறுமி பலியானதும் விசாரணையில் தெரியவந்தது. இதுவரை மொத்தம் 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. 126 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

four × 2 =