இலங்கை கடல்வாழ் உயிரினங்களுக்கு பேராபத்து

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த மே மாதம் எண்ணெய் மற்றும் ரசாயன பொருள்களுடன் சரக்கு கப்பல் ஒன்று பயணித்தது. இந்த நிலையில், அந்தக் கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், அதில் இருந்த ரசாயன பொருள்கள் அனைத்தும் கடல்நீரில் கலந்தன. இதனால், கடந்த சில தினங்களாக கடல் ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இப்போது வரை 176 கடல் ஆமைகளும், 20 டால்பின்களும், 4 திமிங்கலங்களும் கரை ஒதுங்கியிருப்பதாகவும், கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

3 × three =