உருமாறிய இந்திய வகை கரோனாவால் உலகுக்கே ஆபத்து

 

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 

இந்தியாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வகையால், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே உருமாறிய கரோனா வகையை விட இந்தியாவில் உருமாறிய இந்த பி.1.617 வகை எளிதில் பரவும் தன்மை கொண்டதாகவும் உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்திருக்கிறது.

இந்திய வகை கரோனா தொற்று தற்போது 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியிருப்பதாகவும், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேஸில் போன்ற நாடுகளில் கண்டறியப்பட்ட கரோனா வகையுடன் இது ஒத்துப் போவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்திய வகை உருமாறிய கரோனா தொற்று எளிதில் பரவுவது மட்டுமன்றி, தீவிர உடல்நலக் குறைவை ஏற்படுத்தி, தடுப்பூசியால் உடலில் உருவான எதிர்ப்பு சக்தியையும் செயலிழக்க செய்யும் தன்மை வாய்ந்தது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

six − four =