தீப்பற்றி எரியும் சைப்ரஸ்

சர்வதேச நாடுகள் உதவ அபயக்குரல்

ஐரோப்பாவின் சைப்ரஸ் நாட்டில் உள்ள லிமாசோல் மாவட்டத்தின் பெரும் பகுதி காடுகளால் சூழப்பட்டது. இங்கு நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்ததால், பல கிலோமீட்டர் தூரத்துக்கு தீப்பிழம்பு உணரப்பட்டது. மேலும், இந்தத் தீ விபத்து காரணமாக சுற்றுவட்டார கிராம மக்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என உயிரை கையில் பிடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். தீயை அணைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

சைப்ரஸில் கடந்த வாரம் 40 டிகிரி செல்சியஸ் வரை கடுமையான வெப்பம் உணரப்பட்டது. இதன் காரணமாக எழுந்த காற்றின் திசைவேகத்தில் காட்டுத் தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

3 × 3 =