கரையைக் கடந்தது தாக் டே புயல்

இந்திய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த தாக் டே புயல் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் கரையைக் கடந்தது. புயலின் பெரும்பாலான பகுதிகள், சவுராஷ்டிரா பகுதியில் கரையைக் கடந்தன. பெரும் சேதத்தை விளைவிக்கும் புயலின் கண்பகுதி அடுத்த 4 மணிநேரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது மணிக்கு 145 முதல் 155 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டம் போர்பந்தர்- மஹூவா இடையே புயல் கரையைக் கடந்தபோது 175 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் அண்டை மாநிலமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மகாராஷ்டிரத்தின் கொங்கன் மண்டலத்தில் மழைக்கு இதுவரை 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

20 − 9 =