கதறி அழுத ஜெர்மனி சிறுமிக்கு 8 ஆயிரம் பவுண்ட் நிதி

பிரிட்டன் தொழில் அதிபரின் மனிதநேயம்

யூரோ 2020 போட்டியின் ஓர் அங்கமாக இங்கிலாந்து- ஜெர்மனி அணிகள் கடந்த வாரம் மோதின. இதில், இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஜெர்மனியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத அந்நாட்டுச் சிறுமி மைதானத்தில் கதறி அழுதது இணையத்தில் வைரலானது. இதனால், அந்த சிறுமியை இங்கிலாந்து ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்தனர்.

 

இதையறிந்த சௌத் வேல்ஸ் நியூபோர்ட் நகரின் சியர்லியோன் பகுதியை சேர்ந்த 51 வயது தொழில் அதிபர் ஜோயல், மனம் நொந்து போனார். எனவே, சிறுமியை ஆற்றுப்படுத்த ஏதாவது செய்ய வேண்டுமென முடிவெடுத்த அவர், தனது நண்பர்கள் வாயிலாக 8 ஆயிரம் பவுண்ட் திரட்டியிருக்கிறார். இதை அந்த ஜெர்மன் சிறுமியிடம் ஒப்படைத்து, எல்லா பிரிட்டன்வாசிகளும் கெட்டவர்கள் அல்ல என சொல்லப் போவதாக அவர் நிருபர்களிடம் கூறினார்.

Add your comment

Your email address will not be published.

1 × four =