in

புதுச்சேரி உப்பனாறு வாய்காலில் முதலை


Watch – YouTube Click

புதுச்சேரி உப்பனாறு வாய்காலில் முதலை

புதுச்சேரி உப்பனாறு வாய்காலில் முதலை குட்டி..தீயாய் பரவிய தகவலால் திரண்ட மக்கள்…2 மணி நேரமாக நகரத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு…வாகன இரைச்சலால் மறைந்த முதலை…தேடும் பணியில் வனத்துறை தீவிரம்…

புதுச்சேரி காமராஜ் சாலையில் உப்பனாறு வாய்காலில் முதலை குட்டி தென்பட்டது.இதனை பாலத்தை யொட்டியுள்ள கடையில் பணியாற்றிய ஊழியர் ஏழுமலை முதலில் பார்த்துள்ளார்.

அவர் தனது நண்பரான ராஜாவிற்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து புகைப்படம் எடுத்தார்.அதற்குள் அங்கு கூடிய மக்கள் 3 அடி நீளமுள்ள முதலையைபுகைப்படம் எடுத்து வனத்துறைக்கு தெரிவித்தனர்.

அதற்குள் முதலை புகைப்படம் வைரலானது.தகவல் அறிந்து காமராஜ் சாலையில் ஏராளமான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அப்போது ஏற்பட்ட வாகன இரைச்சலால் சற்றுநேரத்தில் முதலை தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போனது..

முதலையை பிடிக்க வாய்காலில் இறங்கிய வனத்துறையினர் முதலையை தேடினார்கள்.அதற்குள் மக்கள் ஏராளமானோர் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
தகவல் அறிந்து தொகுதி எம்எல்ஏ ஜான்குமார் அங்கு வந்து வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு முதலையை விரைந்து பிடிக்க வலியுறுத்தினார்.

இதனிடையே அங்கு வந்த வனத்துறை பாதுகாவலர் வஞ்சுலவள்ளி,ஊழியர்களிடம் ஆற்றின் ஆழத்தை கணக்கிட கூறினார்.5 அடி ஆழம் இருந்ததால் நீரோட்டத்தை நிறுத்தி விட்டு முதலையை பிடிக்கலாம் என கூறினார்.

புதுச்சேரியில் முதல்முறையாக முதலை தென்பட்டுள்ளது. எப்படி வந்தது..எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. பொது மக்கள் முதலையை பார்த்தால் தானாக பிடிக்க முயற்சிக்க வேண்டாம் வனத்துறைக்கு தெரிவிக்கும் படி அவர் கேட்டு கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

விவேக்கின் … 62ஆவது பிறந்தநாள் … சின்னக்கலைவாணரை பற்றி அறியாதவைகள்

ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்த தாய்