புற்றுநோயை கோவிட் தொற்றாக கருதிய இளைஞர்

இங்கிலாந்தின் தோர்ன்பரி பகுதியை சேர்ந்தவர் ராப் ஹாலி. சமீபத்தில் இவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டது. நீண்ட நாள்களாக சோர்வு நீடித்ததால், தான் கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டதாக கருதிய அவர், அதற்கான மருந்து மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தார். மருத்துவ பரிசோதனையில், அவருக்கு வெள்ளையணுக்கள் அதிகளவில் உற்பத்தியானாலும், அவை முழுவடிவம் பெறாத நிலையில், லிக்யூமியா எனும் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. புற்றுநோயை கோவிட் ஆக தவறுதலாக எண்ணி பரிசோதனையை தாமதப்படுத்தியதால் மனம்வருந்திய அவர், தன்னை போல் உடல் சோர்வால் அவதிப்படுபவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Add your comment

Your email address will not be published.

twenty + 15 =