இங்கிலாந்தில் 30-31 வயதினருக்கு தடுப்பூசி

இங்கிலாந்தில் 30-31 வயதுக்குள்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத் துறை அழைப்பு விடுத்துள்ளது. மசூதிகள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு மைதானம், மருந்தகங்கள் உள்ளிட்ட 1,600க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் இதுவரை 75 சதவீத பெரியவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், ஐந்தில் இரண்டு பங்கு மக்களுக்கு இருதவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் வயதுவந்த அனைவருக்கும் வரும் ஜூலை மாத இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் முனைப்பில் சுகாதாரத் துறை செயலாற்றி வருகிறது.

Add your comment

Your email address will not be published.

five × 1 =