வாரணாசியில் கரோனா பரவ காரணம் என்ன?

 

 

இந்தியாவில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் கரோனா பரவல் அதிகமானதால், அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இதனால், அங்கிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வாரணாசி மற்றும் அதை சுற்றியுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில், பேருந்து, லாரிகளில் திரும்ப நேர்ந்தது.

இது தவிர வாரணாசியில் மார்ச் 29இல் நடைபெற்ற மத திருவிழாவுக்காகவும், ஏப்ரல் 18இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காகவும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். ஏற்கெனவே கரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென நிபுணர்கள் எச்சரித்த போதிலும், வாரணாசியில் தேர்தல் நடத்தப்பட்டது.

இதன் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கரோனா பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைந்ததாகவும், உத்தரப் பிரதேசத்தில் கரோனா பரவல் வேகமெடுக்க உள்ளாட்சித் தேர்தல் பிரதான காரணமாக விளங்குவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

Add your comment

Your email address will not be published.

one × four =