கோவிட் தடுப்பூசி ஹீரோக்களுக்கு பாராட்டு

இளவரசி இரண்டாம் எலிசெபத்தின் பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி, கௌரவிப்பது வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஆக்ஸ்போர்ட் கோவிட் தடுப்பூசிகளை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்த பேராசிரியர் சாரா கில்பெர்ட், பிரிட்டன் தடுப்பூசிகள் பணிக்குழுவின் முன்னாள் தலைவர் கேட் பிங்ஹாம் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி, இளவரசி கௌரவித்தார்.
இதேபோல், பிரபல சமையல்கலை நிபுணர் ப்ரூ லீத், நடன இயக்குநர் ஆர்லின் பிலிப்ஸ், நடிகர் ஜோனதான் பிர்ஸ் ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விளையாட்டு துறையில் இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்துவரும் கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், எம்.பி.இ., அதாவது பிரிட்டிஷ் பேரரசின் மிகச்சிறந்த ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

Add your comment

Your email address will not be published.

20 − 6 =