போர்ச்சுகல் நோக்கி படையெடுக்கும் பிரிட்டன் மக்கள்

 

வெளிநாட்டு பயணங்கள் மீதான கட்டு

ப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், போரச்சுகல் நோக்கி பிரிட்டன் மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

பிரிட்டனின் பச்சைப் பட்டியலில் இருக்கும் இஸ்ரேல், போர்ச்சுகல் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு எந்தவித கட்டுப்பாடுமின்றி சென்று வரலாம். எனவே வழக்கமாக செல்லும் நாடுகளை தவிர்த்து, தற்போது போர்ச்சுகலின் பக்கம் பிரிட்டன் மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. எனவே, அதற்கான விமான டிக்கெட்டுகளை அதிக எண்ணிக்கையிலான பயணிகள் புக்கிங் செய்து வருகின்றனர். இதுகுறித்து ஆன்லைன் டிராவல் ஏஜென்ட் தாமல் கூக் கூறுகையில், 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் போர்ச்சுகலை தான் தேர்வு செய்கின்றனர் என்றார்.

பிரிட்டனில் இருந்து வருபவர்கள் 72 மணிநேரத்துக்கு முன்பாக எடுத்த கரோனா நெகடிவ் பரிசோதனை சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டுமென போர்ச்சுகல் அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

one × two =