ஜி7 மாநாடு: இந்திய பிரதிநிதிகளுக்கு கரோனா

 

தனிமைப்படுத்திக் கொண்டார் ஜெய்சங்கர்

 

லண்டனில் நடைபெறும் ஜி7 மாநாட்டில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் இந்திய பிரதிநிதிகள் குழுவில் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அக்குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

மாநாட்டின் மீதமுள்ள பகுதியில், காணொலி வாயிலாக பங்கேற்க இருப்பதாக ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், நெகடிவ் என முடிவு வெளியானது. இருந்தாலும், பாதுகாப்பு கருதி அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

முன்னதாக, பிரிட்டன் வெளியுறவு செயலாளர் பிரீத்தி பட்டேலை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

 

ஜி7 மாநாட்டில் அங்கம்வகிக்கும் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் லண்டனில் கூடியிருக்கின்றனர். இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

nineteen + three =