கோவேக்சினுக்கு விரைவில் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை

இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் கோவேக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரை அந்தத் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்துவதற்கான ஒப்புதலை உலக சுகாதார அமைப்பு விரைவில் அளிக்கும் என அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதேபோல், அமெரிக்கா, பிரேஸில், ஹங்கேரி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை 13 நாடுகளில் அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் கிடைத்திருப்பதாகவும் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

2 × three =