லண்டனில் அமைந்துள்ள பிக் பென் கடிகாரத்தைப் போல கேம்பிரிட்ஜ் நகரில் பிரம்மாண்ட கடிகாரம் ஒன்று கடந்த 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனை பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் திறந்து வைத்தார். இந்த கடிகாரத்தில் சமீபத்தில் சுத்தியல் விழுந்ததால் அதன் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி உடைந்தது.
இதனால் கேம்பிரிட்ஜ் கடிகாரம் அலங்கோலமாக காட்சியளித்தது. இந்த சூழ்நிலையில் தற்காலிகமாக கேம்பிரிட்ஜ் கடிகாரம் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. கண்ணாடி புதிதாக பொருத்தப்பட்ட பின்னர் மீண்டும் கடிகாரம் அங்கு நிறுவப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக சுத்தியல் விழுந்ததில் கண்ணாடிக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings