கங்கையில் மிதக்கும் சடலங்கள்

பிகார் மாநிலம் பக்ஷார் மாவட்டம் சாவ்சா பகுதியில் கங்கைக் கரையில் 71 சடலங்கள் அழுகிய நிலையில் மிதந்து வந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. அதைக் கைப்பற்றிய மாவட்ட நிர்வாகம், கங்கை கரையிலேயே தகனம் செய்தது. பக்ஷார் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வாரணாசி அல்லது அலகாபாத்திலிருந்து அந்த சடலங்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதாவது கரோனா தொற்றுக்கு தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்த ஏழை, எளிய மக்கள், சடலங்களை எரியூட்ட வசதியின்றி, கங்கையில் அனுப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே கங்கைக் கரையில் ரோந்து பணியை பக்ஷார் மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி இருக்கிறது.

இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக கருதிய மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், புனிதமான கங்கை நதியில் சடலங்கள் மிதப்பதை தடுத்து நிறுத்த பிகார் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Add your comment

Your email address will not be published.

19 + 1 =