மோடியின் தொகுதியில் வேகமெடுக்கும் கரோனா

 

 

உலகில் இந்துக்களின் புண்ணிய பூமியாக விளங்கும் வாரணாசியில் (காசி), கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடுமையாக இருக்கிறது.

வட இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தத் தொகுதியில் இருந்துதான் பிரதமர் மோடி, எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகையால், இந்த இக்கட்டான தருணத்தில் மோடி தங்களுக்கு உதவாமல் எங்கே சென்றார் என கேள்வி எழுப்புகின்றனர் வாரணாசி தொகுதி மக்கள்.

கரோனா இரண்டாம் அலையால் சொல்லொணா துயரத்துக்குள்ளான இந்தியாவில், இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் பேர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர்.

 

குறிப்பாக வாரணாசி தொகுதியில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை. மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் பரிதவிக்கின்றனர். கரோனா பரிசோதனை எடுத்தால் முடிவு தெரிய ஒரு வாரம் வரை ஆகிறதாம்.

கடந்த 10 நாள்களாக பெரும்பாலான மருந்துக் கடைகள் விட்டமின், ஜின்க், பாராசிட்டமால் உள்ளிட்ட அடிப்படை மாத்திரைகள் கூட இல்லாமல் செயல்படும் அளவுக்கு நிலைமை படுமோசமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால், பின்விளைவுகளை பற்றி எண்ணாமல், காலாவதியான மருந்துகளை பொதுமக்கள் உட்கொள்வதாகக் கூறுகிறார் பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவ தொழில் நிபுணர் ஒருவர்.

காலாவதியான மருந்து பொருள்களில் செயல்திறன் குறைவாக இருந்தாலும், ஓரளவுக்கு நோயை எதிர்த்து வினைபுரியும் என்ற நம்பிக்கையில் அதை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டிய நிர்ந்தத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

nineteen − nine =