பிரிட்டனில் மேலும் 2445 பேருக்கு கரோனா

22 பேர் பலி

பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2445 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 22 பேர் பலியாகியிருக்கின்றனர்.

பிரிட்டனில் இதுவரை 1 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமானோர் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். சுகாதாரத் துறை செயலாளர் மாத் ஹான்காக் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை தனக்கான தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். அவருக்கு இங்கிலாந்தின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி ஜோனதான் வான் டாம் தடுப்பூசியை செலுத்தினார்.
பிரிட்டனில் ஏப்ரல் 28 வரையிலான நிலவரப்படி, இதுவரை 4 கோடியே 81 லட்சத்து 38 ஆயிரத்து 9 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 3 கோடியே 40 லட்சத்து 94 ஆயிரத்து 48 பேருக்கு முதல் தவணையும், 1 கோடியே 40 லட்சத்து 43 ஆயிரத்து 961 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
லண்டனில் டிசம்பர் 8 முதல் ஏப்ரல் 28 வரையிலான நிலவரப்படி, 35 லட்சத்து 53 ஆயிரத்து 566 முதல் தவணை, 14 லட்சத்து 14 ஆயிரத்து 478 இரண்டாம் தவணை என 49 லட்சத்து 68 ஆயிரத்து 44 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக தேசிய சுகாதார சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

17 − 8 =