கோடை காலத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்கலாம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

 

பிரிட்டனில் பொது முடக்கத்தில் தளர்வுகள் கொண்டுவரப்படுவதால் கோடை காலத்தில் கரோனா பரவலின் வேகம் இன்னமும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இணைக்குழுவை சேர்ந்த பேராசிரியர் ஆடம் பின் கூறியது:
பிரிட்டன், இன்னும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய சூழலில் தான் இருக்கிறது. வயது வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்படாததால், கோடையில் கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்கலாம். எனவே, பொது முடக்க தளர்வுகளை அறிவிக்கும் தேதியில் மாற்றம் கொண்டு வருவது நல்லது என்றார்.

பிரிட்டனில் இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா 3ஆம் அலை தோன்றுவதற்கு வாய்ப்பிருப்பதாக அறிவியல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்திருந்ததாக பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கெனவே கூறினார்.
பிரிட்டனில் இதுவரை வயதுவந்தவர்களில் 19 சதவீதத்தினருக்கு அதாவது 1 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்துக்குள் வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக சுகாதாரத் துறை செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்திருந்தார்.
பிரிட்டனில் செவ்வாய்க்கிழமை கூடுதலாக 2524 பேருக்கு கொரோனா உறுதியானது. 33 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாஸிடிவ் ஆன 28 நாள்களில் இவர்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

twenty + thirteen =