அடுத்த ஆண்டும் கரோனா பாதிப்பு நீடிக்கும்

 

பிரிட்டன் தடுப்பூசித் துறை அமைச்சர் எச்சரிக்கை

 

காய்ச்சலை போல அடுத்த ஆண்டும் உலகில் கரோனா பாதிப்பு நீடிக்கும் என்று பிரிட்டன் தடுப்பூசிகள் துறை அமைச்சர் நதீம் ஷஹாவி தெரிவித்தார்.

 

இதுதொடர்பாக அவர் லண்டனில் அளித்த பேட்டி;

பிரிட்டனில் தடுப்பூசி திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதால், பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும், காய்ச்சலை போல் அடுத்த ஆண்டும் கரோனா தொற்று ஆங்காங்கே உருவெடுக்கலாம், பரவலாம். கரோனா அடுத்த அலையை எதிர்கொள்ளும் நோக்கில் பிரிட்டன் செயல்பட்டு வருகிறது.

தடுப்பூசி திட்டத்தின் வெற்றி என்பது அதன் விநியோகத்திலும் (சப்ளை), தேசிய சுகாதாரப் பணியாளர்களை பணியமர்த்துவதிலும் அடங்கியிருக்கிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நான்கு வகையான தடுப்பூசிகளில் சிறந்ததை தேர்வு செய்யும் பொறுப்பு சுகாதாரத் துறை தலைவர்களிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த ஆண்டுக்குள் பிரிட்டனில் 60 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

அடுத்த ஆண்டில் பைஸர், அஸ்ட்ராஜெனிகா, நோவாவாக்ஸ், வால்நிவா ஆகிய தடுப்பூசிகளில் சிறந்ததை சுகாதாரத் துறை தலைவர்கள் தேர்ந்தெடுப்பர் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

5 × one =