கரோனா போரில் அதிகாரிகளே கள தளபதிகள் பிரதமர் மோடி புகழாரம்

 

கரோனாவுக்கு எதிரான போரில் அதிகாரிகளே கள தளபதிகள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
நாட்டில் 9 மாநிலங்களை சேர்ந்த 46 மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியது:
கரோனாவுக்கு எதிரான இந்த போரில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏராளமான சவால்கள் இருக்கின்றன. இந்த பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவர நாம் நடவடிக்கை எடுத்த ஆக வேண்டும். இந்த போரில், அதிகாரிகள்தான் கள தளபதிகள். பரிசோதனையை துரிதப்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை உள்ளூர்மயமாக்குதல் மற்றும் பொதுமக்களுக்கு சரியான முடிவை அறிவித்தல் ஆகியவை தான் இந்த போரில் நாம் வைத்திருக்கும் ஆயுதங்கள். அதேவேளையில், கள்ள சந்தைகளையும், மருத்துவப் பொருள்களை பதுக்கிவைக்கும் நடவடிக்கையையும் நாம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
மேலும், கரோனா போரில் அதிகாரிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும் எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

Add your comment

Your email address will not be published.

7 + thirteen =