பிரிட்டனில் கரோனா 3ஆம் அலை விஞ்ஞானி எச்சரிக்கை

கரோனா வைரஸ் தாக்குதலின் 3ஆவது அலையின் ஆரம்ப கட்டத்தில் பிரிட்டன் இருப்பதாக விஞ்ஞானியும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியருமான ரவி குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பிரிட்டனில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், கரோனா பெருக்கத்துக்கு உருமாறிய இந்திய வகை தொற்று காரணமாகிவிடுகிறது. எனவே, ஜூன் 21ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ள அடுத்தகட்ட அல்லது இறுதிகட்ட தளர்வுகளை தள்ளிவைப்பது நல்லது என்றார்.

அதேசமயம், இறுதிகட்ட தளர்வுகளை தள்ளிபோடுவது சாத்தியமில்லாதது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜார்ஜ் ஈஸ்டிஸ் தெரிவித்தார். கடந்த திங்கள்கிழமை (மே 31) பிரிட்டனில் 3 ஆயிரம் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியானது. இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்தில் புதிதாக உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. ஸ்காட்லாந்தில் மட்டும் ஒருவர் கரோனாவுக்கு உயிரிழந்தார்.

Add your comment

Your email address will not be published.

2 × four =