கரோனா பொது ஆய்வு அடுத்த ஆண்டு தொடங்கும்

 

 

பிரதமர் போரிஸ் ஜான்சன்

 

கரோனா வைரசை கையாளுவதற்கான சுதந்திரமான பொது ஆய்வு அடுத்த ஆண்டு இளவேனிற் காலத்தில் தொடங்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்றிலிருந்து பாடம் கற்பிப்பது என்பது உயிர்களைக் காக்கவும், எதிர்காலத்தில் வியூகங்களை வகுக்கவும் உதவியாக இருக்கும் என்று கூறி, அதற்கான ஆய்வை இந்த ஆண்டு கோடைக் காலத்திலேயே தொடங்க வேண்டுமென கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதற்கு எம்.பி.க்கள் மத்தியில் பதிலளித்து பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கரோனா தொற்றிலிருந்து படிப்பினையை கற்றுக் கொள்வதற்கான ஆய்வு அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் தொடங்கும். இந்த இக்கட்டான தருணத்தின் ஒவ்வொரு நிலையிலும் பாடம் கற்பிக்க அரசு கடமைப்பட்டிருக்கிறது என்றார்.

Add your comment

Your email address will not be published.

sixteen − two =