பிரேசிலில் கரோனாவுக்கு 4 லட்சம் பேர் பலி

 

 

பிரேசிலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தகதியில் நடைபெற்று வருவதால், அந்நாடு இதுவரை கரோனாவுக்கு 4 லட்சம் பேரை இழந்திருக்கிறது. இதன்மூலம் உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பேர் பலியான நாடுகளின் வரிசையில், பிரேசில் இரண்டாம் இடம்பிடித்திருக்கிறது.

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 3,001 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் அரசு கரோனா தொற்றை கையாளும் விதம் குறித்து அந்நாட்டு பாராளுமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. கரோனா பொதுமுடக்கம், முகக் கவசம் அணிவது ஆகியவற்றுக்கு எதிராகவும், கரோனா தொற்றை எதிர்கொள்ள உறுதிப்படுத்தப்படாத மருந்துகளை பரிந்துரைத்த காரணத்தாலும் அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சோனாரா எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளானார்.

Add your comment

Your email address will not be published.

4 × 3 =