கரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்க ரூ.200 லஞ்சம்

 

சுகாதாரத் துறை அலுவலரின் வேலை பறிபோனது

 

உத்தர பிரதேசத்தில் கரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்க தலா ரூ.200 வசூலித்த சுகாதாரத் துறை அலுவலரின் வேலை பறிக்கப்பட்டது.

பருக்காபாத் மாவட்டம் நவாப்கஞ்ச் சுகாதார மையத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருபவர் விஜய் பால் (வயது 50). இவர் கரோனா சோதனைக்காக வரும் பொதுமக்களிடம் நெகடிவ் சான்றிதழ் அளிக்க வேண்டுமென்றால், தனக்கு ரூ.200 லஞ்சம் தர வேண்டுமென வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை தாமாக முன்வந்து விசாரித்த பருக்காபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்டு, சுகாதாரத் துறை அலுவலர் விஜய் பாலை உடனடியாக வேலையிலிருந்து நீக்கியதுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

Add your comment

Your email address will not be published.

20 + 8 =