கரோனா: விராட் கோலி- அனுஷ்கா சர்மா ரூ.2 கோடி நிதியுதவி

 

ரூ.7 கோடி திரட்ட முடிவு

 

கரோனா இரண்டாம் அலையால் மிகவும் பாதிப்புக்குள்ளான இந்திய மக்களுக்கு உதவுவதற்காக கிரிக்கெட் நட்சத்திர வீரர் விராட் கோலியும், அவரது மனைவியும், பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இணைந்து ரூ.2 கோடி நிவாரணம் அளித்திருக்கின்றனர். மேலும், ரூ.7 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாக அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அனுஷ்கா சர்மா கூறியருப்பதாவது;

கரோனா இரண்டாம் அலையை எதிர்த்து நம் தேசம் போரிடுகிறது. இந்த தருணத்தில் நமது சுகாதார அமைப்பு கடுமையான தவால்களை எதிர்கொள்கிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை பார்க்கும்போது எனது இதயம் சுக்குநூறாக நொறுங்குகிறது. எனவே, பொதுமக்களுக்கு உதவுவதற்காக நானும், விராட் கோலியும் இணைந்து நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறோம். பொதுமக்களுக்கு உதவுவதற்காகவும், ஆதரவு கரம் நீட்டுவதற்காகவும் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு இது. ஆகையால் இந்த சிறிய உதவியை நாங்கள் செய்கிறோம். வாருங்கள், அனைவரும் இதில் பங்கேற்று நம்மாலான உதவிகளை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Add your comment

Your email address will not be published.

2 × 1 =