கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கலாம்

பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பிரிட்டனில் கரோனா பரவல் இப்போதைக்கு கட்டுக்குள் வந்தாலும், ஆங்காங்கே உருமாறிய புதிய வகை தொற்று கண்டறியப்பட்டிருப்பதால், அது மீண்டும் வேகமெடுக்க வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பொதுமுடக்க தளர்வுகளை தள்ளிவைக்கலாம் என்றும் அரசுக்கு விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் கரோனா பரவல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்ததை விட இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதத்தில் பாதிக்கும் கீழாக கரோனா பரவல் குறைந்துவிட்டது. ஆனாலும், ஆங்காங்கே உருமாறிய கரோனா தொற்றுவகை கண்டறியப்படுவதால், கரோனா பற்றிய அச்சம் இன்னும் அகலவில்லை என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்தில் பொதுமுடக்கத்தின் மீதான அடுத்தகட்ட தளர்வுகள் மே 17 முதல் அமலுக்கு வருகின்றன. இந்தச் சூழலில், விஞ்ஞானிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருப்பதன் மூலம் ஜூன் 21இல் அரசு வெளியிட திட்டமிட்டுள்ள நான்கு அல்லது இறுதிகட்ட தளர்வுகள் தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியாவில் உருமாறிய கரோனா பிரிட்டனிலும் கண்டறியப்பட்டிருப்பதால், கரோனா தொடர்பான அச்சம் அதிகரித்து வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

three × 5 =