பிரிட்டனில் வலுவிழந்தது கரோனா

மருத்துமனைகளில் அட்மிஷன் வெகுவாக குறைந்தது

பிரிட்டனில் கரோனா பரவலின் வேகமும், வீரியமும் வலுவிழந்ததால், மருத்துவமனைகளில் கரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அதிலும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 21 நாள்களிலேயே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கரோனாவுக்கு எதிராக போரிட தொடங்குவதாகவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
கரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களில் பெரும்பாலும் வயதானவர்களும், உடல் பலவீனமானவர்களுமே இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆனாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் மட்டுமே அதற்கான எதிர்ப்பு திறனை பெற்றுவிடுவதாகவும், இதனால் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், தடுப்பூசிகள் 100% நேர்த்தியானவை என்றோ, தவறுகள் நேரிடாது என்றோ சொல்ல முடியாது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளில் கடந்த டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்களில், நான்கில் ஒரு பகுதியினரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை அரசின் அறிவியல் ஆலோசகர்களிடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது

Add your comment

Your email address will not be published.

seven + 9 =