பிரிட்டனில் வேகம் குறைந்தது கரோனா

 

பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2064 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் கரோனா தொற்றின் வேகம் 30.3% குறைந்திருக்கிறது.
கடந்த வாரம் இதே திங்கள்கிழமை 2963 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, 4 பேர் பலியாகியிருந்தனர். அதற்கு முந்தைய வாரம் 3,568 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 13 பேர் மரணமடைய நேரிட்டது. அதை ஒப்பிடுகையில், இந்த வாரம் கரோனா பரவல் வேகம் வெகுவாக குறைந்துவிட்டது தெரியவருகிறது.
இன்றைக்கு ஸ்காட்லாந்தில் கரோனாவால் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. வட அயர்லாந்தில் ஒருவரும், வேல்ஸ் மாகாணத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனில் கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,27,434 ஆக உயர்ந்துவிட்டது. பாதிப்பின் எண்ணிக்கை 44,06,946 என்ற நிலையில் இருக்கிறது. இதனிடையே, 3 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 885 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1 கோடியே 28 லட்சத்து 97 ஆயிரத்து 123 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

1 × one =