இந்தியாவில் கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சமாக உயர்வு

 

பாதிப்பில் தமிழகம் முதலிடம்

 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 4,454 பேர் பலியானதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்தது. இதன்மூலம் கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3ஆம் இடத்தை இந்தியா பிடித்தது. அதேவேளையில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு முதன்முறையாக கரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து 2,22,315 ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 35,483 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கு அடுத்ததாக மகாராஷ்டிரத்தில் 26,672 பேருக்கும், கர்நாடகத்தில் 25,979 பேருக்கும் கரோனா தொற்று உறுதியானது.

இதனிடையே, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான குறுகியகால பாடத் திட்டத்தின் அடிப்படையில், பொதுத் தேர்வு நடத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எடுத்த முடிவுக்கு, பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி, தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், அவர்களை கண்காணிக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டுமென கேரளா, அசாம், டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஹரியாணா, மேகாலயா ஆகிய மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Add your comment

Your email address will not be published.

8 − one =