கரோனா கவச உடையுடன் திருமணம் செய்த தம்பதி!

 

இந்தியாவில் கரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்தவாறு தம்பதி வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் அவர்களுக்கு ஏப்ரல் 29இல் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில், மணமகனுக்கு திடீரென கரோனா தொற்று ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டதால், திருமணம் தள்ளிவைக்கப்படுவதாக இருந்தது. எனினும் இதை ஏற்க மறுத்த மணமக்கள், கரோனா பாதுகாப்புக் கவச உடை அணிந்தவாறு திருமணம் செய்துகொள்ள முன்வந்தனர். இதற்கு ஆரம்பத்தில் சுகாதாரத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.
பின்னர், அதிகாரிகள் சம்மதத்துடன் சிறிய அறையில் அவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. இதையொட்டி ஹோமம் வார்க்கப்பட்டு மணமக்கள் அதை சுற்றிவந்து, முறைப்படி தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர். இதில், இரண்டு குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. திருமணம் முடிந்ததும் மணமகன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மணப்பெண் உள்ளிட்ட திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

10 + 6 =