எதிர்பார்த்ததை விட இந்திய வகை கரோனா பரவல் வேகம் குறைவு

எதிர்பார்த்ததை விட இந்திய வகை கரோனா பரவல் வேகம் குறைவாக இருப்பதாகவும், இதில் பயப்படும்படியாக ஏதுமில்லை என்றும் பேராசிரியர் நீல் பெர்குசன் தெரிவித்தார்.

 

பிரிட்டனின் போல்டன், பெட்போர்டு, பிளாக்பர்ன் உள்ளிட்ட நகரங்களில் இந்தியவகை கரோனா பரவலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இதன் பரவல் வேகம் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால், பிரிட்டனில் கரோனா 3ஆவது அலைக்கு வழிவகுத்துவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதே கருத்தை பிரதமர் போரிஸ் ஜான்சனும் வழிமொழிந்தார்.

இந்தச் சூழலில், பிரிட்டனில் முதல்கட்ட பொதுமுடக்கம் அமலுக்கு வர காரணமாக இருந்த பேராசிரியர் நீல் பெர்குசன் புதன்கிழமை இதுபற்றி கூறியதாவது:

எதிர்பார்த்தைக் காட்டிலும் பிரிட்டனில் இந்தியவகை கரோனா வேகமாக பரவவில்லை. இதன் பரவல் வீதம் 20 முதல் 30 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது. இந்த வகை கரோனாவை எதிர்கொள்வது எளிது. பெரும்பாலும், இந்தியாவிலிருந்து வந்தவர்களால்தான் இந்த கரோனா பிரிட்டனில் ஊடுருவியிருக்கிறது. மேலும், நெருக்கடியான பகுதிகளில் வசிப்பவர்கள் மூலமாக இந்த கரோனா அடுத்தவர்களுக்கும் பரவியிருக்கிறது என்றார்

Add your comment

Your email address will not be published.

one × five =