பிரிட்டனில் கலப்பட ரத்தத்தால் 120 மாணவர்கள் பலியான விவகாரம் விசாரணை நிறைவு பெறுகிறது

இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான டிரிலோர் கல்லூரியில் கடந்த 1974 முதல் 1987ஆம் ஆண்டுவரை படித்த மாணவர்கள் ஹீம”ஃ”போலியா நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால், 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாக நேர்ந்தது. இதனிடையே, 72 பேருக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. மற்றும் வைரல் ஹெபடிடிஸ் நோய்த்தாக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத் துறை வரலாற்றில், இத்தனை மாணவர்கள் பலியான விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதன் விசாரணை 30 ஆண்டுகளை கடந்து இன்னும் நீடிக்கிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், விரைவில் முடிவு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

nineteen − 15 =