இங்கிலாந்தின் எசக்ஸ் தொகுதியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிலேஷ் வாட்லிங். கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இவர், அடுத்த ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.
இங்கிலாந்தை பொறுத்தவரை ஓர் எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் சம்பந்தப்பட்ட கட்சியினரின் மதிப்பையும் மரியாதையையும் அவர் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், கிளாக்டன் கன்சர்வேடிவ் அசோசியேசன் சார்பில் அடுத்த எம் பி யை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் கிலேஷ் வாட்லிங் தோல்வி அடைந்தார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்று தெரிய வருகிறது. கட்சிக்காரர்கள் தனக்கு ஓய்வளித்து விட்டதாக கிலேஷ் வாட்லிங் மிகவும் கூலாக பதில் அளித்தார்.
GIPHY App Key not set. Please check settings