வாயை கொடுத்து வம்பில் சிக்கிய பிரிட்டன் நிகழ்ச்சி தொகுப்பாளினி

 

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்

பிரிட்டனை சேர்ந்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான கேட்டி ஹோப்கின்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு டி.வி. ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் சென்றார். அப்போது, தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், ஊரடங்கு என்பது மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய ஏமாற்று வேலை என்று நக்கலாக தெரிவித்திருந்தார்.

சிட்னியில், கோவிட் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட சூழலில், அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இதை மிகவும் தீவிரமாக கருதிய ஆஸ்திரேலிய அரசு, கேட்டி ஹோப்கின்சின் விசாவை உடனடியாக ரத்து செய்து அவரை பிரிட்டன் அனுப்பியது. அவருக்கு 1,000 ஆஸ்திரேலிய டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்டதால், தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலேயே அவர் தாயகம் திரும்பினார்.

Add your comment

Your email address will not be published.

13 + 13 =