கொலம்பியா அதிபரின் ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு

துப்பு கொடுத்தால் ரொக்க பரிசு

கொலம்பியா அதிபர் இவான் டியூக் கடந்த சனிக்கிழமை வெனிசுலா எல்லை அருகே ஹெலிகாப்டரில் பறந்தபோது, அவரது ஹெலிகாப்டரை குறிவைத்து விஷமிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஹெலிகாப்டரின் இறக்கை பகுதியில் குண்டு துளைத்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிபரின் மீதான இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் ஆகியன கண்டனம் தெரிவித்தன. இந்தச் சூழலில், தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து தகவல் அளித்தார், உள்ளூர் மதிப்பின்படி 3 பில்லியன் பிசோஷ் அதாவது 5,73,000 பவுண்ட் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என கொலம்பியா அரசு தெரிவித்திருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

3 + sixteen =