கனடாவில் ஒரே நாளில் 10 தேவாலயங்கள் சூறை

கனடாவில் அந்த தேசம் நிர்மாணிக்கப்பட்ட தினமான ஜூலை 1ஆம் தேதி ஆண்டுதோறும் கனட தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், நேற்று ஒரே நாளில் ஆல்பெர்ட்டா மாகாணத்தில் 10 தேவாலயங்கள் சூறையாடப்பட்டு, அங்கு ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணங்கள் பூசப்பட்டன.

கனடாவில் தேவாலய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவந்த உண்டு உறைவிட பள்ளிகளில் நூற்றுக்கணக்கான சமாதிகள் கண்டறியப்பட்டதால், அதன் விளைவாக எழுந்த அதிருப்தி காரணமாக பூர்வகுடிமக்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

thirteen − 9 =