ஒரே புகாரில் ஓய்ந்தது 121 ஆண்டுகால தேவாலய மணி

இங்கிலாந்தின் டெவோன் கேன்டன் கிராமத்தில் உள்ள ஆல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் கடந்த 121 ஆண்டுகளாக ராட்சத மணி பொருத்தப்பட்டு, ஒவ்வொரு மணிநேரத்துக்கும் வசனத்துடன் ஒலி எழுப்பி வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் சமீபத்தில் குடியேறிய நபர், ஆலய மணிஓசை தனக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி, சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டார். இதுதொடர்பாக சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடம் புகார் செய்ததால், 121 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலய மணி அகற்றப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Add your comment

Your email address will not be published.

one × 4 =