கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல் சம்பவம் படத்திலிருந்து விலகினார் தயாரிப்பாளர் 

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 51 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவத்தை மையமாக கொண்டு தெய் ஆர் வித் அஸ் என்ற பெயரில், அமெரிக்க ஆதரவுடன் திரைப்படம் ஒன்று நியூசிலாந்தில் எடுக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாத தாக்குதலை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கையாண்ட விதம் குறித்து இப்படத்தில் விவரிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அந்த படத்திலிருந்து அதன் தயாரிப்பாளர் பிலிப்பா காம்பெல் விலகியுள்ளார். முன்னதாக, படத்தை ஒப்புக்கொண்டமைக்காக அவர் வருத்தமும் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

4 × two =