பிரச்னைகளை வளர்க்கிறது சீனா அமெரிக்கா குற்றச்சாட்டு

 

 

இருநாட்டு உறவை மேம்படுத்துவதை தவிர்த்து, பிரச்னைகளை நீட்டிப்பதில் சீனா கடுமையாக நடந்துகொள்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

 

அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகம், பெருந்தொற்றை எதிர்கொள்ளுதல் போன்றவற்றில் பனிப்போர் நிலவுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் அமெரிக்க பாராளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றிய அந்நாட்டு அதிபர் ஜோ பிடன், சீனாவுடன் மோதல் போக்கை நாம் விரும்பவில்லை. அண்மையில் சீன அதிபர் ஜி ஷின் பிங்குடன் பேசியபோது கூட, இருநாடுகளிடையே சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு ஆரோக்கியமான போட்டியை நாம் விரும்புவதாக குறிப்பிட்டேன் என்றார்.

இந்த நிலையில், அமெரிக்க அரசின் செயலாளர் அன்டோனி பிலிங்கன் செய்தி சேனல் ஒன்றுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

சீனா வெளிநாடுகளுடன் தீவிரமாகவும், உள்நாட்டில் அடக்குமுறையையும் கையாள்கிறது. சீனாவை கவிழ்க்க நாம் விரும்பவில்லை. ஆனால், விதிமுறைகள் சார்ந்த சர்வதேச உத்தரவை அந்நாடு தரக்குறைவாக நினைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்றார்.

மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், சீன அதிபர் ஜி ஷின் பிங்கும் கடந்த பிப்ரவரியில் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏராளமான விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், இந்த உரையாடல் இரண்டு மணிநேரம் வரை நீடித்ததாகவும் அன்டோனி பிலிங்கன் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் அமெரிக்க} சீன உறவு முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு வாஷிங்டனில் தற்போது அமைந்துள்ள புதிய நிர்வாகம் தீர்வு காண வேண்டுமென சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

12 + 11 =