இறக்குமதியில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளியது சீனா

பிரிட்டனுக்கு பொருள்களை இறக்குமதி செய்வதில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்திருக்கிறது. கடந்த 2018இல் தொடங்கிய பிரிட்டன்- ஜெர்மனி வர்த்தகம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 66 சதவீதம் அதிகரித்து, 16.9 பில்லியன் பவுண்ட் மதிப்பை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் பிரிட்டனுக்கான ஜெர்மனி இறக்குமதி வீதம் 12.5 பில்லியன் பவுண்டாக குறைந்துவிட்டது. பிரெக்ஸிட் காரணமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளில் வணிக ரீதியாக ஏற்பட்ட இடையூறுகளும், கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள சீன பொருள்களுக்கான தேவை அதிகரிப்பும் இந்த மாற்றத்துக்கு காரணம் என தேசிய புள்ளியியல் அலுவலகம் விளக்கம் அளித்தது.

Add your comment

Your email address will not be published.

16 + 6 =