சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி

 

சீனாவில் பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட மந்தம் காரணமாக தம்பதி, 3 குழந்தைகள் பெற்றுக் கொளள அனுமதி அளிக்கப்படுகிறது.

சீனாவில் கடந்த 2016ஆம் ஆண்டுவரை தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்ட சுணக்கம் காரணமாக அந்த விதிமுறை தளர்த்தப்பட்டு, இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பிலும், பிறப்பு வீதத்தில் உயர்வு ஏற்படாதது தெரியவந்தது. ஆகையால், தற்போது ஒவ்வொரு தம்பதியும் அதிகபட்சமாக 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அதிபர் ஷி ஜின் பிங்கும் ஒப்புதல் அளித்துவிட்டார்.

மற்ற நாடுகளை போல அல்லாமல், சீனா அதன் மக்கள்தொகை பெருக்கத்தை சாதகமான வளமாக கருதுவது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

two × one =