தடுப்பூசி செலுத்திக் கொண்டார் இளவரசர் வில்லியம்

கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் கரோனாவுக்கு எதிரான முதல் தவணை தடுப்பூசியை செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டார்.

பிரிட்டனில் 40 வயதுக்குள்பட்டோருக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 38 வயதாகும் கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம், செவ்வாய்க்கிழமை தனக்கான முதல் தவணை தடுப்பூசியை அருங்காட்சியகத்தில் பெற்றுக் கொண்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “”கரோனா தடுப்பூசியை நான் செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டேன். தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
பிரிட்டனில் அடுத்தகட்ட பொதுமுடக்க தளர்வுகள் ஜூன் 21ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது. அதேசமயம், இந்தியவகை கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தளர்வுகள் தள்ளி போடப்படலாம் என்று தகவல் வெளியானது. இந்த சூழலில், இளவரசர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் மூலம் அவை உள்ளபடியே ஜூன் 21இல் நடைமுறைக்கு வர வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Add your comment

Your email address will not be published.

3 × four =